கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை தொடர்பான பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இந்நாட்களில் கணினிமயமாக்கப்பட்டு வருவதாகவும், முடிவுகள் அடுத்த மாத இறுதியில் வெளியிடப்படும் எனவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.
பெறுபேறுகளை கணினி மயமாக்கும் தினசரி திறன் இரண்டரை இலட்சம் என்றும், பரீட்சை முடிவுகளை மாணவர்களுக்கு விரைவில் வழங்க பரீட்சை திணைக்கள ஊழியர்கள் இரவு பகலாக உழைத்து வருவதாகவும் தெரிவித்தார்.
2022 (2023) கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பெறுபேறுகள் உயர்தர விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் ஏற்பட்ட தாமதத்தினால் தாமதமாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆகஸ்ட் 18ம் திகதி துவங்கி, ஆகஸ்ட் 27ம் திகதி வரை பத்து நாட்கள் விடைத்தாள் மதிப்பீடு நடந்தது.