follow the truth

follow the truth

September, 24, 2024
Homeஉள்நாடுவியாபாரிகளே விலைகளைத் தீர்மானிக்கின்றனர் : நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை என்ற ஒன்று எதற்கு?

வியாபாரிகளே விலைகளைத் தீர்மானிக்கின்றனர் : நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை என்ற ஒன்று எதற்கு?

Published on

நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபைக்கு வரவு – செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கப்படக் கூடாது என்றும் அதனை முழுமையாக மூடிவிடுமாறும் வலியுறுத்தி நாளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக நுகர்வோர் உரிமைகள் தொடர்பான செயற்பாட்டாளர் அசேல சம்பத் தெரிவித்தார்.

நாளை நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபைக்கு முன்னர் சென்று அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளோம். நுகர்வோர் அபிவிருத்தி அதிகாரசபைக்கு வரவு – செலவு திட்டத்தில் நிதி ஒதுக்க வேண்டாம் என்றும் , அதனை மூடுமாறும் வலியுறுத்தி இந்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்.

நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிடுவதும் பின்னர் இரத்து செய்வதற்கும் மாத்திரமே இருக்கிறது. இதனை செய்து கொண்டு பொது மக்களின் வரிப்பணத்தில் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை ஊழியர்களுக்கு ஊதியமளிப்பது பிரயோசனமற்றது.

தற்போது வியாபாரிகளே விலைகளைத் தீர்மானிக்கின்றனர். அவ்வாறெனில் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை என்ற ஒன்று எதற்கு? என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்று நள்ளிரவு முதல் பாராளுமன்றம் கலைக்கப்படவுள்ளது

இன்று நள்ளிரவு முதல் பாராளுமன்றம் கலைக்கப்பட உள்ளது பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பான வர்த்தமானியில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கையொப்பமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. குறித்த...

புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு – மேலும் பலரை கைது செய்ய CID விசாரணை

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள் கசிந்தமை தொடர்பில் மேலும் சிலரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக...

ஜனாதிபதி நாளை நாட்டு மக்களுக்கு விசேட உரை

ஜனாதிபதி அனுர திஸாநாயக்க நாளை(25) இரவு 7.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இந்த விசேட...