இஸ்ரேலுக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வந்து அரசியல் தீர்வுக்கு ஆதரவளிக்கத் தயார் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் பேசிய ரஷ்ய ஜனாதிபதி புடின் இதனைத் தெரிவித்துள்ளார்.
அங்கு, ஹமாஸ் தீவிரவாதிகளை ஒழிக்கும் வரை, ஹமாஸ் அமைப்பை பலவீனப்படுத்தும் வரை போராட்டத்தை நிறுத்தப் போவதில்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதியாக தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் பிரதமருடனான பேச்சுவார்த்தைக்கு முன், ரஷ்ய ஜனாதிபதி புடின், ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத், எகிப்து ஜனாதிபதி அப்துல் ஃபத்தா அல்-சிசி மற்றும் பாலஸ்தீன அதிகாரசபையின் தலைவர் முகமது அப்பாஸ் ஆகியோருடனும் பேச்சு வார்த்தை நடத்தினார் என்று கிரெம்ளின் தெரிவித்துள்ளது.