follow the truth

follow the truth

September, 24, 2024
Homeஉள்நாடுவிநியோகத்திற்கு அமைவாக விலைகள் தீர்மானிக்கப்படும்: நிதியமைச்சு

விநியோகத்திற்கு அமைவாக விலைகள் தீர்மானிக்கப்படும்: நிதியமைச்சு

Published on

சந்தையில் நிலவும் கேள்வி மற்றும் விநியோகத்திற்கு அமைவாக அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் தீர்மானிக்கப்படுமென நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும், அசாதாரணமான முறையில் பொருட்களின் விலைகளை உயர்த்துவதற்கான எவ்வித சந்தர்ப்பமும் வியாபாரிகளுக்கு வழங்கப்படமாட்டாதென நிதியமைச்சின் செயலாளர் எஸ் .ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார்.

சந்தையில் அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்படாத வகையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஸ் .ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார்.

சீனி, பருப்பு, கோழி இறைச்சி, உருளைக்கிழங்கு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் பலவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்கி அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டது.

நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவரது கையொப்பத்துடன் குறித்த அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டது.

இதற்கமைய, நுகர்வோர் விவகார அதிகார சபையினால் இதற்கு முன்னர் வௌியிடப்பட்ட 07 வர்த்தமானி அறிவித்தல்கள், புதிய வர்த்தமானி அறிவித்தல் ஊடாக செல்லுபடியற்றதாக்கப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதி நாளை நாட்டு மக்களுக்கு விசேட உரை

ஜனாதிபதி அனுர திஸாநாயக்க நாளை(25) இரவு 7.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இந்த விசேட...

ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகமாக வைத்தியர் நஜித் இந்திக்க

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகமாக வைத்தியர் நஜித் இந்திக்க நியமிக்கப்பட்டுள்ளார். ஹம்பாந்தோட்டை ரன்ன மத்திய கல்லூரி...

புதிய பிரதமரின் செயலாளர், அமைச்சின் செயலாளர்கள் நியமனம்

பல அமைச்சகங்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.