டொலர் தட்டுப்பாடு காரணமாக கொழும்பு துறைமுகத்தில் 900 இற்கும் மேற்பட்ட கொள்கலன்கள் விடுவிக்கப்படாமல் ஒரு மாதத்திற்கும் மேலாக தேங்கிக் கிடப்பதாக துறைமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டொலர் தட்டுப்பாடு காரணமாக கடந்த காலங்களில் அத்தியாவசியப் பொருட்களுடன் பெருமளவிலான கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியிருந்தமையினால் நாட்டில் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த கொள்கலன்களில் சுமார் 10,000 மெட்ரிக் டொன் சீனி அடங்கிய சுமார் 350 கொள்கலன்கள் இருந்ததாகவும், துறைமுகத்தில் சீனி கொள்கலன்கள் விடுவிக்கப்படாமையே நாட்டில் சீனி தட்டுப்பாட்டுக்கு முக்கிய காரணம் என துறைமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.