follow the truth

follow the truth

December, 21, 2024
HomeTOP1தொடரும் பணிப்புறக்கணிப்பு – அலுவலக ரயில் சேவையில் தாமதம்

தொடரும் பணிப்புறக்கணிப்பு – அலுவலக ரயில் சேவையில் தாமதம்

Published on

ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் குழுவால் தொடங்கப்பட்ட பணி புறக்கணிப்பு நடவடிக்கை இன்றும் தொடர்கிறது.

மாளிகாவத்தை புகையிரத வீதியின் நுழைவாயிலில் வைத்து புகையிரத பாதுகாப்பு உத்தியோகத்தர் பிரதி கட்டுப்பாட்டாளர் ஒருவரை தாக்கியதை அடுத்து, ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் நேற்று (04) முதல் பணி புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி நேற்று சுமார் 78 ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டதுடன், பல ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.

எவ்வாறாயினும், நேற்று தாக்குதலுக்கு உள்ளான பாதுகாப்பு அதிகாரியை பணி இடைநிறுத்தம் செய்வதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்திருந்தது.

ஆனால் தாக்குதலில் ஈடுபட்ட ஏனைய நபர்கள் தொடர்பில் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ரயில்வே பிரதி கட்டுப்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Whatsapp Channel : https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சுற்றுலாத்துறைக்கு மிகப்பெரிய கெசினோ சந்தை தேவை…- சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர்

இந்தியாவின் பாரிய கசினோ சுற்றுலா சந்தைக்கு நிகரான சுற்றுலா திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர்...

வக்பு நியாய சபையின் விசாரணைகளை ஒலிப்பதிவு செய்த குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைது

வக்பு நியாய சபையின் விசாரணைகளை ஒலிப்பதிவு செய்த குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் மருதானை பொலிஸாரினால் இன்று (21) கைது...

தாய்வான் நாடாளுமன்றில் அமளிதுமளி

அரசியலமைப்பில் இடம்பெற்றுள்ள சில சட்டங்கள் திருத்தம் செய்வதில் எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக, தாய்வான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர்...