புகையிரத ஒழுங்குமுறை அதிகாரிகள் சங்கம் இன்று காலை முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இன்று காலை மாளிகாவத்தை புகையிரத தளத்தில் பிரதி கட்டுப்பாட்டாளர் ஒருவருக்கும் புகையிரத பாதுகாப்பு சேவை அதிகாரி ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலே இந்த பணிப்பகிஷ்கரிப்புக்கு காரணம் என அந்த அதிகாரி தெரிவித்தார்.
பிரதி கட்டுப்பாட்டாளரை தாக்கியதாக கூறப்படும் புகையிரத பாதுகாப்பு சேவையின் நிரந்தர ஊழியரை பணி இடைநிறுத்துமாறு ஒழுங்குபடுத்தும் தொழிற்சங்கம் கோரி வருவதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டிருந்தார்.