இந்து சமுத்திர வலயத்திற்கான சுனாமி அனர்த்த ஒத்திகை வேலைத்திட்டம் இன்று(04) முன்னெடுக்கப்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
சுனாமி பேரழிவை எதிர்கொள்வதற்காக, பிராந்திய நாடுகளின் திறனை மேம்படுத்தும் நோக்கில் இந்து சமுத்திர வலயத்தில் உள்ள 28 நாடுகளின் பங்கேற்புடன் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, திருகோணமலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களை மையப்படுத்தி காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த வேலைத்திட்டத்தை இந்து சமுத்திர வலய சுனாமி எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு கட்டமைப்பு மற்றும் யுனெஸ்கோ அமைப்பு ஆகியன ஏற்பாடு செய்துள்ளன.
இந்த காலப்பகுதியில், சுனாமி அபாயம் தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் பொய்யான தகவல்களை பரப்புவதை தவிர்க்குமாறும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.