இலங்கை மின்சார சபை ஊழியர்கள் மாபெரும் போராட்டமொன்றை முன்னெடுத்து வரும் நிலையில், சில இடங்களில் மின் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை ஊழியர் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் இணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.
தாம் போராட்டத்தை முன்னெடுக்கும் போது விநியோகத் தடை ஏற்பட்டால் அதனை சரிசெய்யப் போவதில்லை என மின்சார சபை ஊழியர்கள் ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் இலங்கை மின்சார சபை ஊழியர்கள் கொழும்பில் மாபெரும் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
அத்துடன், சில இடங்களில் மின் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளதாக தமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளதாக ரஞ்சன் ஜயலால் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதற்கு எதிர்த்து மக்களும் வீதிகளில் இறங்கிப் போராட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
கெரவலப்பிட்டியவில் உள்ள யுகதானவி மின் உற்பத்தி நிலையம் தொடர்பாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட நியூ ஃபோர்ட்ரஸ் எனர்ஜி இன்க் நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை கைவிடுமாறும் அதன் விவரங்களை வெளியிடுமாறும் தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றன