இன்று பிற்பகல் அமைச்சரவைக் கூட்டத்தில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளது.
இது தொடர்பில் கடந்த முறை அமைச்சரவையிலும் பேசப்பட்ட நிலையில் அமைச்சர் நளின் பெர்னாண்டோ மாத்திரமே இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த பிரேரணைக்கு மேலும் பல அமைச்சர்களும் இன்று எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சரவைக் கூட்டம் இன்று பிற்பகல் 3 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
இதற்கிடையில், நீர் கட்டணங்கள் திருத்தம் குறித்தும் பேசப்படுகிறது.