இன்று (27) முதல் நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழையுடனான காலநிலையில் சிறிதளவு அதிகரிப்பு எதிர்பார்க்கப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் கண்டி, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் பல காலகட்டங்களில் மழை பெய்யக் கூடும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனவும் அது சுட்டிக்காட்டுகிறது.
இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்கள் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.