உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான Nissan, மின்சார கார் உற்பத்தியை துரிதப்படுத்த தீர்மானித்துள்ளது.
ஐரோப்பாவில் விற்கப்படும் அனைத்து Nissan கார்களையும் 2030 ஆம் ஆண்டிற்குள் பிரத்தியேகமாக எலெக்ட்ரிக் கார்களாக மாற்ற நிறுவனம் இலக்கு வைத்துள்ளது.
இதேவேளை, 2030 ஆம் ஆண்டுக்கு பின்னர் டீசல் மற்றும் பெட்ரோல் கார்களை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கும் பிரித்தானியாவின் தீர்மானம் 2035 ஆம் ஆண்டு வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இங்கிலாந்து முடிவை கருத்தில் கொள்ளாமல் Nissan தனது முடிவை அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையில், Nissan தலைவர் தனது முடிவு சரியானது என்று கூறுகிறார்.
இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் புதிய பேட்டரி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த Nissan திட்டமிட்டுள்ளது.
இதனால் எலக்ட்ரிக் கார்களின் விலை குறையும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.