ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் அமைந்துள்ள இராணுவ வைத்தியசாலைக்கு அருகில் இரண்டு சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த குண்டுவெடிப்பில் உயிர்ச்சேதம் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை எனவும் இது தொடர்பில் தலிபான் அதிகாரிகளிடம் இருந்து எந்த கருத்தும் உடனடியாக கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றன.