தற்போதுள்ள சீன உரங்களின் மாதிரிகளை மூன்றாவது சுற்று சோதனைக்கு உட்படுத்த வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவித்துள்ளார்.
‘தற்போதுள்ள உர மாதிரிகளில் 3 ஆவது முறையாக சோதனை நடத்தப்படாது. எங்களுடைய விவரக்குறிப்புகளின்படி உரம் தயாரிக்கப்பட வேண்டும் என்று சீன உற்பத்தியாளரிடம் தெளிவாகத் தெரிவித்துள்ளோம். இதன் பொருள் உரத்தில் எந்த உயிரினங்களும் அல்லது நுண்ணுயிரிகளும் இருக்க முடியாது. மேலும், உரங்கள் எங்கள் விவரக்குறிப்புகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டவுடன் புதிய மாதிரிகளை பரிசோதிப்போம் என்று நாங்கள் கூறினோம், ‘என்று இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ கூறினார்.
இலங்கையில் உள்ள ஆய்வகங்களும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்படவில்லை, எனவே புதிய மாதிரிகள் சோதனைக்கு கொண்டு வரப்படும் போது மூன்றாம் தரப்பு சிறந்ததாக இருக்கும் என்றும் சஷீந்திர ராஜபக்ஷ தெரிவித்தார்.