நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவை எந்த நேரத்திலும் கட்சி ஏற்கத் தயார் எனவும் ஆனால் அவருக்கு தலைவர் மற்றும் செயலாளர் பதவிகளை வழங்குவதில் நம்பிக்கை இல்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நேற்று(24) கொழும்பு டார்லி வீதியிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் கட்சியின் தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் உப அமைப்புப் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“தயாசிறி விரும்பினால் எந்த பிரச்சினையும் இல்லை. அவர் எந்த நேரத்திலும் வரலாம்” என்று மைத்திரிபால சிறிசேன அங்கு கூறினார்.
கட்சியின் செயலாளர் பதவியில் இருந்து தயாசிறி ஜயசேகரவை நீக்கும் தீர்மானம் தொடர்பில், மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி விரிவாக உண்மைகளை விளக்கினார்.
அடுத்த வருடம் தேர்தல் ஆண்டாகும் என்றும், ஓரிரு தேர்தல்கள் வரலாம் என்பதால், அதற்கு தயாராகுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் கட்சியின் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.
அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, நாடாளுமன்ற உறுப்பினர்களான துமிந்த திஸாநாயக்க, ஷான் விஜயலால் டி சில்வா ஆகியோரும் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.