எதிர்வரும் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன 51% அல்லது அதற்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டுவதற்கு ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென தேசிய அமைப்பாளராக இருந்த அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கட்சியின் மூத்த தலைவர்களுடனான சந்திப்பில், பிரச்சார நடவடிக்கைகளில் மற்ற கட்சிகளை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட வேண்டாம் என கட்சி எம்.பி.க்களுக்கு தெரிவிக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்து ஆலோசித்து கட்சி எடுக்கும் தீர்மானங்கள் தொடர்பில் மேலும் கலந்துரையாடவுள்ளதாக தெரிவித்த பசில் ராஜபக்ஷ, மேலும் சீர்திருத்தங்கள் தேவைப்பட்டால் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.