follow the truth

follow the truth

January, 1, 2025
Homeஉள்நாடுஇணையம் ஊடான மோசடிகள் தொடர்பில் 150 முறைப்பாடுகள்

இணையம் ஊடான மோசடிகள் தொடர்பில் 150 முறைப்பாடுகள்

Published on

இணையம் ஊடாக இடம்பெறும் மோசடிகள் தொடர்பில் 150 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ஷருக்க தமுனுபொல குறிப்பிட்டார்.

தொழில் பெற்றுத்தருவதாகக் குறிப்பிட்டு சட்டவிரோதமான முறையில் அடையாள அட்டை, பிறப்புச்சான்றிதழ், கடவுச்சீட்டுகளின் பிரதிகள் மோசடிக்காரர்களினால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

பொதிகள், பரிசில்கள் தங்களிடம் உள்ளதாகவும், அதனை பெற்றுக்கொள்ளுமாறு குறுஞ்செய்திகளை அனுப்பி நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான விடயங்கள் தொடர்பில் மிகவும் பாதுகாப்பாக செயற்படுமாறும், தனிப்பட்ட தரவுகளை வௌியிட வேண்டாமெனவும் பொதுமக்களை கேட்டுக்கொள்வதாக சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ஷருக்க தமுனுபொல அறிவுறுத்தினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புலமைப்பரிசில் பரீட்சை – 03 வினாக்களுக்கு இலவச புள்ளிகளை வழங்க தீர்மானம்

சர்ச்சையை ஏற்படுத்திய புலமைப்பரிசில் பரீட்சையின் கசிந்ததாகக் கூறப்படும் 3 வினாக்களுக்கும் அனைத்து பரீட்சார்த்திகளுக்கும் இலவச புள்ளிகளை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக...

போக்குவரத்து விதிமீறல்கள், ஏனைய குற்றங்கள் தொடர்பில் அறிவிக்க பொலிஸாரினால் புதிய APP அறிமுகம்

'கிளீன் ஸ்ரீலங்கா' திட்டத்துடன் இணைந்து, இலங்கை பொலிஸாரினால் e-Traffic மொபைல் செயலியை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கையடக்கத் தொலைபேசி செயலியை இன்று(01) பொலிஸ்...

கடந்த 24 மணிநேரத்தில் 7,264 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

இன்று (01) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட போக்குவரத்து நடவடிக்கையின் போது, மதுபோதையில்...