follow the truth

follow the truth

March, 15, 2025
HomeTOP2இலங்கை சபாநாயகர் - பங்களாதேஷ் சபாநாயகர் சந்திப்பு

இலங்கை சபாநாயகர் – பங்களாதேஷ் சபாநாயகர் சந்திப்பு

Published on

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள பங்களாதேஷ் சபாநாயகர் (கலாநிதி) ஷிரின் ஷர்மின் சவுத்ரி (Shirin Sharmin Chaudhury) மற்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கும் இடையில் சந்திப்பொன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.

இதன்போது பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தாரிக் மொஹமட் அரிஃபுல் இஸ்லாம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை குறுகிய காலத்தில் சமாளித்தமை தொடர்பில் பங்களாதேஷ் சபாநாயகர் (கலாநிதி) ஷிரின் ஷர்மின் சவுத்ரி இதன்போது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

மேலும், 2024 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இடம்பெறவுள்ள பங்களாதேஷ் பாராளுமன்றத் தேர்தலை அடுத்து இரு நாடுகளுக்குமிடையிலான பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை மீள்புதுப்பிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை பங்களாதேஷுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளுமாறும் பங்களாதேஷ் சபாநாயகர் இதன்போது அழைப்புவிடுத்தார்.

அதற்கு மேலதிகமாக, இரு நாடுகளினதும் பாராளுமன்ற முறைமை, சுகாதாரச் சேவை, கைத்தொழில் துறை, சுற்றுலாத் துறை, முதலீடு மற்றும் ஏற்றுமதி போன்ற விடயங்கள் தொடர்பில் இரு தரப்பினரிடையே கலந்துரையாடல் இடம்பெற்றது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் நிகழ்வு

முஸ்லிம்களின் புனித ரமழான் நோன்பு மாதத்தையிட்டு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் இப்தார் நிகழ்வு இன்று (14)...

அம்பலாங்கொடை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

அம்பலாங்கொடை இடம்தொட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் அம்பலாங்கொடை, இடம்தோட்டை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர்...

மாணவர்களுக்கு வழங்கப்படும் 6,000 ரூபா வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

பாடசாலை மாணவர்களுக்கு உபகரணம் பெற்றுக் கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ள 6000 ரூபா வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் மார்ச் 31 ஆம்...