நியூசிலாந்தின் தெற்கு தீவுக்கு அருகில் இன்று (20) காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்நாட்டு நேரப்படி காலை 9.20 மணியளவில் பதிவான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது.
நியூசிலாந்தின் பல பகுதிகளில் இதன் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் சேதம் ஏதும் ஏற்படவில்லை.