தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் கார் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பிலான விசாரணை உடனடியாக அமுலுக்கு வருமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.