பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் வாகனம் மீது, நேற்றிரவு சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
அநுராதபுரத்தில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பிய பின்னர் குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.