ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியின் சூப்பர் நான்கு சுற்றில் இலங்கை அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான போட்டி இன்று (14) நடைபெற உள்ளது.
இப்போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமானதாக அமையும், இதில் வெற்றி பெறும் அணி இந்திய அணியுடன் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
தற்செயலாக இன்றைய போட்டி சமநிலையில் முடிவடைந்தால் இலங்கை அணி இறுதிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறும்.
இறுதிப் போட்டி எதிர்வரும் 17ஆம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.