புகையிரத சாரதிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை பொருட்படுத்தாது இன்று (12) பிற்பகல் 34 புகையிரத பயணங்களை மேற்கொள்ள ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, பிரதான பாதையில் 12 புகையிரத பயணங்கள், கரையோரப் பாதையில் 12 பயணங்கள், புத்தளம் பாதையில் 6 புகையிரத பயணங்கள் மற்றும் களனிவெளி பாதையில் 4 புகையிரத பயணங்கள் என இந்த பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.