ஒரு நாடு, ஒரே சட்டம்’ செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் இந்தக் குழுவினால் தயாரிக்கப்படும் சட்ட வரைவில் பொதுபல சேனாவின் முன்மொழிவுகளும் உள்ளடக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய கலகொட அத்தே ஞானசார தேரர் கடந்த காலங்களில் பொதுபல சேனா எழுப்பிய பிரச்சினைகள் இன்றும் அவதானிக்கப்பட வேண்டியவையாக உள்ளன.
இதன் விளைவாக பொதுபல சேனா எழுப்பிய மற்றும் விவாதிக்கப்பட்ட பிரச்சினைகள் செயலணியால் விவாதிக்கப்பட்டு வரைவு சட்டத்தில் சேர்க்கப்படும் என்று கூறினார்.
பொதுபல சேனா தற்போது புதிய பாத்திரத்தை ஏற்றுள்ளதுடன் அதன் செயற்பாடுகளை தொடரும் எனவும் அவர் கூறினார்.
இலங்கையில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து செயலணிக்கு நன்கு தெரியும் என ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
பிரிந்து செல்வதன் மூலம் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என ஞானசார தேரர் வலியுறுத்தியுள்ளார்.