follow the truth

follow the truth

March, 19, 2025
HomeTOP1அடுத்த 2 வாரங்களில் வெள்ள இழப்பீடு தொடர்பான அமைச்சரவைப் பத்திரம்

அடுத்த 2 வாரங்களில் வெள்ள இழப்பீடு தொடர்பான அமைச்சரவைப் பத்திரம்

Published on

வெள்ளத்தினால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் எதிர்வரும் இரண்டு வாரங்களில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக அம்பாந்தோட்டை மாவட்டம் உட்பட பல பிரதேசங்களில் அறுவடைக்கு அருகில் இருந்த பல வயல் நிலங்கள் அழிவடைந்துள்ளன.

இதன்படி, வறட்சியால் ஏற்பட்ட பயிர் சேதம் தொடர்பான அமைச்சரவை பத்திரத்தில் தொகுக்கப்பட்டுள்ள வெள்ளத்தினால் ஏற்பட்ட பயிர் சேதங்களை மதிப்பிடுவதற்கான தகவல்கள் தற்போது சேகரிக்கப்பட்டு வருவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இதனிடையே, உள்ளூர் உருளைக்கிழங்கின் கொள்முதல் விலை குறைந்ததால் தாம் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக உருளைக்கிழங்கு விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு சந்தையில் தொடர்ந்தும் வெளியிடப்படுவதால் உள்ளூர் உருளைக்கிழங்கை கொள்வனவு செய்ய வர்த்தகர்கள் தயக்கம் காட்டுவதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம் (நேரலை)

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. இதன் நேரடி ஔிபரப்பை கீழே காணலாம்,

தேசபந்து நீதிமன்றில் ஆஜர்

கடந்த 2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகம பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக பிடியாணை பெற்றிருந்த...

மற்றொரு கோர விமான விபத்து – 12 பேர் பலி

மத்திய அமெரிக்காவின் ஹோண்டுராஸில் நடந்த விமான விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். விபத்தில் ஐந்து பேர் உயிர் தப்பியதாகவும், ஒருவர்...