விளையாட்டுத்துறை அமைச்சராக அடுத்த வாரம் பதவிப் பிரமாணம் செய்து கொள்வதாக சிலர் கூறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குறிப்பிடுகின்றார்.
தனக்குச் சொந்தமில்லாத அமைச்சுப் பதவியை ஏற்கத் தயாரில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவும் பல தடவைகள் அமைச்சுப் பதவியை ஏற்குமாறு தன்னை அழைத்ததாக அவர் கூறுகிறார்.
ஆனால் இந்த அரசாங்கத்தின் அமைச்சுப் பதவிகளை ஏற்க தாம் தயாராக இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குருநாகல், பண்டுவஸ்நுவர பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தம்மை நீக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் சட்டவிரோதமானது எனத் தெரிவித்த அவர், அப்போது அரசியல் குழுவில் 6 பேர் இருந்ததாகவும், 14 பேர் இருந்திருக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.