follow the truth

follow the truth

March, 25, 2025
HomeTOP2உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான உண்மையை வெளிப்படுத்துங்கள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான உண்மையை வெளிப்படுத்துங்கள்

Published on

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றும், அதே போல் உண்மையை தெரிந்து சதித்திட்டங்கள் பற்றியும், பிரதான சூத்திரதாரிகளாக செயல்பட்டவர்களை அடையாளம் காண வழிவகுத்த உண்மைகள், இதற்குக் காரணமான குற்றவாளிகள் அனைவரும் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளார்களா என்ற உண்மையை அறிய விரும்புவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக இரு தரப்பினராகப் பிரிந்து அடித்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினாலும் 2019 ஜனாதிபதித் தேர்தலிலும் 2020 பொதுத் தேர்தலிலும் பிரிவினையாக்கம் மேற்கொள்ளப்பட்டதாகவும், இது தொடர்பில் உண்மையைக் கண்டறியவே பொதுஜன பெரமுன மக்கள் ஆணையைக் கோரிய போதும், அந்த ஆணை வழங்கப்பட்டு வருடங்கள் பல கடந்தும் உரிய நீதி வழங்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

கத்தோலிக்க சமூகம், கர்தினால், பாதிரியார்கள் என அனைவரினதும் நம்பிக்கையைப் பெற்று விசாரணை முன்னெடுக்கப்பட்டிருந்தால் இன்று இதைப் பற்றி பேச வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது என்றும், இது போன்ற தாக்குதல்கள் பற்றிய தகவல்களை அறிய வெளிநாட்டவர்களின் அறிவுரை தேவைப்பட்டிருக்காது என்றும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றாததே தற்போதைய நிலைமைக்கு முக்கிய காரணம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் இன்று (8) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உண்மை எது என்று கண்டறியும் குழுவுக்கும், உண்மையை மறைத்து செயல்படும் குழுவுக்கும் இடையே தான் இன்று பிளவு உருவெடுத்துள்ளதாகவும், இந்நாட்டில் முறையான விசாரணை நடத்தப்படாவிட்டால் சர்வதேச விசாரணை தேவை என்றும், இதற்கு தேசிய ரீதியான குழுவினரை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்றும், எந்த தரப்பிலும் சந்தேகம் எழாத வகையில் வெளிப்படையான முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நேரத்தில் உண்மை தெரிய வேண்டும் என்றும், சேறு பூசும் அரசியல் தமக்குத் தேவையில்லை என்றும், ஷானி அபேசேகரவை சிறையில் அடைக்காமல் இந்த விசாரணையை முடியுமானால் அவரிடம் ஒப்படைக்குமாறும், ஜனாதிபதியும் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளார் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை போக்குவரத்துச் சபையின் எதிர்காலத் திட்டமிடல் குறித்து கலந்துரையாடல்

இலங்கை போக்குவரத்துச் சபையின் எதிர்கால நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பது மற்றும் மக்களுக்குத் தரமான பயணிகள் போக்குவரத்துச் சேவையை வழங்குவதற்கான...

கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூடு – மற்றுமொரு சந்தேகநபர் கைது

அண்மையில் கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகலகம் வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் இன்று...

சீனாவுடன் வர்த்தகத்திற்கு தயாராகும் இந்தியா

டிரம்பின் வரி அச்சுறுத்தலையடுத்து, சீனாவுடனான வர்த்தகத்திற்கு தீவிரமாக இந்தியா தயாராகி வருகிறது. எல்லை பிரச்சினை தற்போது பெரியதாக இல்லாத...