அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோருக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் விசேட கோரிக்கை விடுப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இந்த குழுவின் செயற்பாடுகள் மற்றும் நடத்தைகள் அரசாங்கத்தின் எதிர்காலத்திற்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும் என்பதனால் இந்த கோரிக்கையை முன்வைப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் உறுதியான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படாத நிலையில் யுகதனவி மின் உற்பத்தி நிலையம் தொடர்பில் கவலைப்பட வேண்டாம் என நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ கட்சித் தலைமைக் கூட்டத்தில் தெளிவுபடுத்தியிருந்த போதிலும் இவ்வாறு அரசாங்கத்தை விமர்சிப்பது மிகவும் அசிங்கமான செயல் என செயலாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பூர்வாங்க உடன்பாடு மாத்திரமே உள்ளதால், ஒப்பந்தத்தை வரைவதற்கு முன்னர் அனைத்து தரப்பினரும் சிபாரிசு செய்ய வேண்டும் என நிதியமைச்சர் கூட்டத்தில் தெளிவுபடுத்தியதாக காரியவசம் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கைகளின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்ற கேள்வியும், சந்தேகமும் எழுந்துள்ளதாகவும் அவர் கூறினார்