ஆட்ட நிர்ணயம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர் சசித்ர சேனாநாயக்கவை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் உத்தரவிட்டுள்ளார்.
விளையாட்டு ஊழல் விசாரணைப் பிரிவின் அதிகாரிகளால் இன்று (06) காலை அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதன் பின்னர், சசித்ர சேனாநாயக்க நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.