அமெரிக்காவில் பதிவாகும் கொரோனா தொற்றுகளில் 80% க்கும் மேல் டெல்டா வைரஸால் ஏற்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி தலைமை மருத்துவ ஆலோசகர் ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து ஆண்டனி ஃபாஸி கூறும்போது, “அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாக பதிவு செய்யப்படும் கொரோனா தொற்றுகளில் 80% க்கும் மேல் டெல்டா வைரஸால் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தடுப்பூசி காரணமாக அதிகமான நபர்கள் மருத்துவமனைகளில் வந்து அனுமதிக்கப்படுவது குறைந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
”டெல்டா வைரஸ் மிக மோசமான வைரஸ் என்பது தெளிவாகிறது. ஒருவரிடமிருந்து மற்றவருக்குத் தொற்று பரவுவதை டெல்டா வைரஸ் அதிகப்படுத்தியுள்ளது. டெல்டா வைரஸைக் கட்டுப்படுத்துவதில் அமெரிக்கா சிறப்பாகச் செயல்படுகிறது . அமெரிக்காவில் சில இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் வேகம் குறைந்துள்ளது. அதனை அதிகரிக்க வேண்டும் ” என்று ஃபாஸி முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் அமெரிக்காவில் தடுப்பூசி இலக்கு எட்டப்படாமல் இருப்பதற்கு சமூக ஊடகங்களே காரணம் என்று அமெரிக்க அரசு கூறியிருந்தது.
அமெரிக்காவில் இதுவரை 3 கோடிக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.