சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையிலான எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இன்று ஆரம்பமாகவுள்ளது.
நாளையும் நாளை மறுதினமும் காலை 09.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை விவாதம் நடைபெறும் என நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பு எதிர்வரும் 8ஆம் திகதி மாலை 05.30 மணிக்கு இடம்பெறவுள்ளதாகவும் நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, தனக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.