இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பது தொடர்பான சட்டமூலம் அடுத்த மாதம் சபையில் சமர்ப்பிக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று (5) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதியின் பின்னர் குறித்த சட்டமூலம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மின்சார சபையில் பணியாற்றும் 24000 ஊழியர்களின் வினைத்திறன் தொடர்பில் பிரச்சினைகள் காணப்படுவதாகவும், தேவையான இடங்களில் ஊழியர்களை குறைக்க வேண்டியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
சில சேவைகள் வெளியில் இருந்து ஆட்சேர்ப்பு செய்யப்படுவதால் வாரியத்திற்கு பெரும் சுமை ஏற்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொலன்னறுவை மாவட்ட சபை உறுப்பினர் கின்ஸ் நெல்சன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.