சிம்பாப்வே தேசிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் சிறந்த ஆல்-ரவுண்டருமான ஹீத் ஸ்ட்ரீக் இன்று (03) தனது 49 வயதில் காலமானார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு மேலாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர், தென்னாப்பிரிக்காவில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.
சிம்பாப்வே அணிக்காக ஹீத் ஸ்ட்ரீக், இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் 65 டெஸ்ட் மற்றும் 189 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். சிம்பாப்வே அணியின் சிறந்த ஆல்-ரவுண்டராக ஜொலித்த இவர், உலக கிரிக்கெட்டிலும் சிறந்த ஆல்-ரவுண்டராக பார்க்கப்பட்டார்.