2023 ஆசியக் கிண்ணத் தொடரின் மிகுதி போட்டிகளுக்காக இலங்கை கிரிக்கெட் அணி இன்று (01) கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து பாகிஸ்தான் நோக்கிப் பயணமாகின்றனர்.
அதன்படி, இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி எதிர்வரும் 5ஆம் திகதி பாகிஸ்தானின் லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் நடைபெறவுள்ளது.