ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான போட்டி இன்னும் சிறிது நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.
பல்லேகல சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் பங்களாதேஷ் அணித் தலைவர் ஷகிப் அல் ஹசன் நாணயற் சுழற்சியில் வெற்றி பெற்றுள்ளார்.
முதலில் துடுப்பாட்டத்தினை பங்களாதேஷ் தீர்மானித்துள்ளது.