follow the truth

follow the truth

November, 17, 2024
HomeTOP1கோதுமை மாவுக்கான வரி அதிகரிப்பால் பாணின் விலை அதிகரிக்குமா?

கோதுமை மாவுக்கான வரி அதிகரிப்பால் பாணின் விலை அதிகரிக்குமா?

Published on

இறக்குமதி செய்யப்படும் கோதுமை மா தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானங்களின் அடிப்படையில் பாண் மற்றும் பேக்கரி பொருட்களின் விலைகளை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கோதுமை மாவை இறக்குமதி செய்வதற்கு தேவையான அனுமதிப்பத்திர முறைமையை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவுக்கான வரி அதிகரிப்பு பேக்கரி தொழிலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்

ஆனால் பேக்கரி தொழில் கடும் சிரமங்களுக்கு மத்தியில் இயங்கி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கோதுமை மா இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரியும் கிலோ ஒன்றுக்கு 16 ரூபாவில் இருந்து 27 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கோதுமை தானியங்களுக்கு 6 ரூபா வரி விதிக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரசாங்கத்தின் கொள்கைப்பிரகடனம் – நவம்பர் 21 பாராளுமன்றில் முன்வைப்பு

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் ஆரம்பத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் 2024 நவம்பர் 21ஆம் திகதி மு.ப 11.30...

தமிழரசுக் கட்சியின் தேசியபட்டியல் ஆசனம் சத்தியலிங்கத்திற்கு

தமிழரசுக் கட்சியின் தேசியபட்டியல் ஆசனத்தை வைத்தியர் ப.சத்தியலிங்கத்திற்கு வழங்க கட்சியின் அரசியற்குழு தீர்மானித்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன்...

NPP தேசிய பட்டியல் உறுப்பினர்கள் பெயர்கள் வௌியீடு

தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றம் செல்லும் உறுப்பினர்களின் பெயர் பட்டியலை தேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ளது. இதன்படி,...