கண்டியின் வரலாற்று சிறப்புமிக்க எசல பெரஹெரா திருவிழாவின் கடைசி ரந்தோலி பெரஹெர இன்று (30) வீதி உலா வரவுள்ளது.
இதன்படி கண்டி நகரை மையமாக கொண்டு விசேட போக்குவரத்து திட்டமொன்றை பொலிஸார் நடைமுறைப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடைசி ரந்தோலி அணிவகுப்பு இன்று (30) இரவு 07.03 மணிக்கு தலதா தெரு, யட்டிநுவர தெரு, கந்தே தெரு, டி. எஸ்.சேனநாயக்கா தெரு வழியாக வந்து, ராஜா தெருவில் ஏறி, தலதா மாளிகைக்கு செல்லவுள்ளது.
அந்தக் காலப்பகுதியில், பின்வரும் போக்குவரத்துத் திட்டம் மற்றும் வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் மக்களுக்கு அறிவுறுத்துகின்றனர்.