இந்த அரசாங்கத்தின் அமைச்சரவையில், பொய்யாகவும், திருட்டுத் தனமாகவும் அமைச்சரவைத் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதாக ஆளும் கட்சியின் பங்களாகிக் கட்சியான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்தார்.
இலங்கையின் எரிபொருள் வளத்தை அமெரிக்காவிற்குத் தாரை வார்க்க அரசாங்கம் முயற்சித்துள்ளதாகவும் இதற்கு எதிர்ப்பு அரசாங்கத்தில் உள்ள 12 பங்காளிக் கட்சிகள் இன்று மக்கள் பேரவையின் முதல் கூட்டத்தை நடத்தியிருந்தன.
இதில் உரையாற்றும்போதே விமல் வீரவங்ச இதனைத் தெரிவித்தார்.
ஐந்து வருடங்களுக்கு மட்டும் ஆட்சியைக் கைப்பற்றி, நாட்டிற்கு தொடர்ச்சியாக கிடைக்கும் வளங்களை வெளிநாடுகளுக்குப் பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கையின் எரிவாயுவைப் பெறும் வளத்தை அமெரிக்காவிற்கு நீண்டகாலத்திற்கு வழங்கவதற்கு அமைச்சரவையில் திருட்டுத்தனமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் இருந்து வெளியேறினாலும் இந்தத் தீர்மானத்தை எதிர்த்துப் போராடுவதாகவும் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்தார்.