இஸ்லாமிய அரசு பயங்கரவாத அமைப்பாளர்கள் நாடு திரும்பினார்களா? இவ்விடயம் தொடர்பில் கேள்வியெழுப்பியுள்ள அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அமைப்பு, கடுமையான ஆய்வுகளை மேற்கொண்டு நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுப்பதாக தெரிவிக்கின்றது.
2019ஆம் ஆண்டு இலங்கை மீதான பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடைய ஐ.எஸ் அமைப்பு மீண்டும் நாட்டிற்குள் பிரவேசித்துள்ளதா என்பது குறித்து அவசர விசாரணை நடத்தி நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை கடந்த 24ஆம் திகதி மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்கிரமரத்ன ஆகியோருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதி விதிமுறைகள் மீதான விவாதத்தின் போது, இலங்கையில் ஐ.எஸ் அமைப்பினால் பயிற்சி பெற்ற 25 பேர் உள்ளதா என எதிர்க்கட்சி உறுப்பினர் சமிந்த விஜேசிறி வினவினார். இதைத் தொடர்ந்து எம்.பி.க்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை இங்கு வெளியிடப்பட்டுள்ள அறிக்கைகளின் ஊடாக எழுந்த சந்தேகங்களின் அடிப்படையில் இந்தக் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளது.
அந்த நாடாளுமன்ற அமர்வில் இடம்பெற்ற உரையின் உண்மை பொய்மை குறித்தும் கடந்த காலங்களைப் போன்று உரிய தகவல்கள் கிடைத்தும் துரித நடவடிக்கை எடுக்காததால் ஏற்பட்ட கெடுபிடிகள் குறித்தும் விரிவான விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டுமென கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தில் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கூறப்பட்டுள்ளமையும் விசேட அம்சமாகும்.