கொழும்பில் உள்ள பேரா ஏரியின் நீரை சுத்திகரித்து பராமரிக்கும் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இப்பணியை சிங்கப்பூர் நிறுவனமான Groepo Pte.Ltd அதன் உள்ளூர் துணை நிறுவனமான Groepo Lanka Bioscience (Pvt) Ltd இற்கு வழங்கியுள்ளது.
பேரே ஏரியை துர்நாற்றம் இல்லாமல் சுத்தம் செய்து வளர்ச்சிப் பணிகளுக்கு பயன்படுத்த அந்த நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான நிறுவனம் பேரே ஏரியை சுத்தம் செய்ய உயர் தொழில்நுட்ப கருவிகள் மற்றும் அறிவியல் முறைகளை பயன்படுத்த உள்ளது.
அதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்த திட்டத்திற்கு அமைய பேரா ஏரியில் சேரும் கழிவுநீர் மற்றும் கழிவுகளை அகற்றுவதற்கான வழிகளை கண்டறிந்து அதற்கான மாற்று வழிமுறைகளை அறிமுகப்படுத்துமாறு அமைச்சரவை சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளது.
இலங்கை நில அபிவிருத்திக் கூட்டுத்தாபனம், இலங்கை துறைமுக அதிகாரசபை, நகர அபிவிருத்தி அதிகார சபை, மத்திய சுற்றாடல் அதிகார சபை, இலங்கை காலநிலை நிதி நிறுவனம் மற்றும் கொழும்பு மாநகர சபை ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவொன்றும் செயற்பாடுகளை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டுள்ளது.