வாக்னர் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் கொல்லப்பட்டதாக நம்பப்படும் ஜெட் விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் 10 உடல்கள் மற்றும் விமானப் பதிவுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
இது குறித்து தற்போது மூலக்கூறு மரபணு சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமானம் வெடிகுண்டு அல்லது ஏவுகணை தாக்குதலால் அழிக்கப்பட்டிருக்கலாம் என்று பல ஆய்வாளர்கள் ஊகித்துள்ளனர்.
பிரிகோஜினைக் கொல்ல கிரெம்ளின் உத்தரவு பிறப்பித்தது என்ற பிரச்சாரத்தை முற்றிலும் நிராகரிப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் முன்பு கூறியிருந்தார்.
எவ்வாறாயினும், விபத்துக்கான காரணம் குறித்து உறுதியான முடிவு எட்டப்படவில்லை என வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.