இந்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ‘கோமாக்சிக்லாவ்’ (Co Amoxiclav) என்ற நுண்ணுயிர் எதிர்ப்பியின் மற்ற மூன்று வகை மருந்துகளின் தரம் குறைவாக இருப்பது உறுதிசெய்யப்பட்டதன் காரணமாக அதனை அகற்றுமாறு மருத்துவ வழங்கல் துறை அனைத்து மருத்துவமனைகளுக்கும் அறிவித்துள்ளது.
சுவாச அமைப்பு தொடர்பான நோய்கள் உட்பட பாக்டீரியா நோய்களுக்கு இந்த நாட்டின் மருத்துவமனை அமைப்பில் Co Amoxiclav என்ற மருந்து பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது மற்றும் தற்போது குழந்தை நோய்த்தொற்றுகளுக்கான முதல் வரிசை மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.
களுத்துறை மாவட்டத்திலுள்ள நிறுவனமொன்றினால் உற்பத்தி செய்யப்பட்ட இந்த நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பல தொகுதிகள் தரம் குறைந்தவை என உறுதி செய்யப்பட்டமையினால் முன்னர் பாவனையில் இருந்து விலக்கப்பட்டிருந்ததோடு, குறித்த மருந்து தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்திடம் நாடு ஆய்வு அறிக்கையை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.