இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் மீன் உற்பத்திகளை இணையத்தளத்தின் ஊடாக வீடுகளுக்கே பெற்றுக் கொள்ள முடியும் என கடற்றொழில் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
மீன்பிடி கூட்டுத்தாபனங்கள் தற்போதைய சந்தைக்கு ஏற்றவாறு புதுப்பித்து, உணவு மற்றும் பொருட்கள் விநியோக சேவைகள் மூலம் நுகர்வோர் மீன் பொருட்களை தங்கள் வீடுகளுக்கு கொண்டு செல்வதற்கான இடத்தை உருவாக்கி இருப்பதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா தெரிவித்தார்.
நாரஹேன்பிட்டி பொருளாதார நிலைய வளாகத்தில் அமைந்துள்ள எச் 18 என்ற பெயரிடப்பட்ட கடற்றொழிலாளர் கூட்டுத்தாபனத்தின் கடையொன்றை மீளத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்படி, முதற்கட்டமாக கொழும்பு மற்றும் புறநகர் பகுதி மக்களுக்கு இந்த வசதி வழங்கப்படவுள்ளது.
கடற்றொழில் அமைச்சும் கடற்றொழில் கூட்டுத்தாபனமும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ள போதிலும் தொலைநோக்குப் பார்வையுடன் முன்னெடுத்துச் செல்ல முயற்சிப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.