புகையிரத மின்சார ஊழியர்களுக்கும் புகையிரத பொது முகாமையாளருக்கும் இடையில் இன்று (25) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
ரயில்வே கட்டுப்பாட்டாளர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் புகையிரத மின்சார ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மின்சார ஊழியர்கள் குழுவொன்று நேற்று முன்தினம் திடீர் தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றினை ஆரம்பித்திருந்தது.
இதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக அனைத்து ரயில் பாதைகளிலும் ரயில் தாமதம் ஏற்பட்டதாகவும், அங்கு பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியதையும் காண முடிந்தது.
இது தொடர்பில் ரயில்வே பொது முகாமையாளரை இன்று காலை சந்திக்க ரயில்வே மின்சார ஊழியர்கள் தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.