கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வரலாற்று சிறப்பு மிக்க எசல பெரஹெர திருவிழாவின் நான்காவது கும்பல் பெரஹெர இன்று (24) இரவு வீதியுலா நடைபெறவுள்ளது.
இதேவேளை, கண்டியில் நடைபெறவுள்ள எசல பெரஹரவை முன்னிட்டு மக்களின் வசதிக்காக 4 விசேட புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த ரயில் நாளை மறுதினம் (26ஆம் திகதி) முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை இயங்கும் என ரயில்வே போக்குவரத்து கண்காணிப்பாளர் எம்.ஜே.இந்திபொலகே தெரிவித்தார்.
அதன்படி, கொழும்பு கோட்டையில் இருந்து கண்டி மற்றும் மீண்டும் கோட்டைக்கு ஒரு ரயில் இயக்கப்படும்.
ஊர்வலம் முடிந்து வெளியேறும் மக்களுக்காக கண்டியில் இருந்து மாத்தளை, கண்டியில் இருந்து நாவலப்பிட்டி மற்றும் கண்டியில் இருந்து கொழும்பு கோட்டை வரை ரயில்கள் இயக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.