‘ஒரே நாடு ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணியில் தமிழ் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணங்கியுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (இ.தொ.கா) உப தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இது போன்ற செயல் ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற கருத்துக்கு எதிரானது என்றும், எனவே திருத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
தமது கோரிக்கைக்கு ஜனாதிபதி இணங்கியதாகவும், ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணியை விரிவுபடுத்துவதாக உறுதியளித்ததாகவும் செந்தில் தொண்டமான் மேலும் தெரிவித்தார்.
நேற்று (28) மாலை அலரிமாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சித் தலைவர்களின் பங்குபற்றுதலுடன் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.