follow the truth

follow the truth

November, 19, 2024
Homeவிளையாட்டு'முத்தத்திற்கு' மன்னிப்பு கோரிய ஸ்பெயின் கால்பந்து சங்க தலைவர்

‘முத்தத்திற்கு’ மன்னிப்பு கோரிய ஸ்பெயின் கால்பந்து சங்க தலைவர்

Published on

மகளிர் கால்பந்து உலகக்கிண்ணத்தினை வென்ற பின்னர், பரிசளிப்பின்போது ஸ்பெயின் கால்பந்து சங்க தலைவர் வீராங்கனையை முத்தமிட்டதற்கு மன்னிப்பு கோரியுள்ளார்.

ஸ்பெயின் மகளிர் கால்பந்து அணி சிட்னியில் நடந்த போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

பரிசளிப்பு விழாவின்போது ஸ்பெயின் கால்பந்து சங்க தலைவர் லூயிஸ் ரூபியாலெஸ் சில வீராங்கனைகளை கட்டிப்பிடித்து பாராட்டியதுடன், ஜெனிஃபர் ஹெர்மோசா என்ற வீராங்கனையின் உதட்டில் முத்தமிட்டார்.

இது பெரும் சர்ச்சையாக வெடித்தது. மேலும் ஜெனிஃபர் ரூபியாலெஸ் நடந்து கொண்ட விதம் பிடிக்கவில்லை என்று பதிவிட்டார்.

இந்நிலையில் விளையாட்டுத்துறை அமைச்சர் உட்பட பல தலைவர்களும் ரூபியாலெஸை கண்டித்ததால் அவர் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “..நான் செய்தது முற்றிலும் தவறு என்பதை ஒப்புக் கொள்கிறேன். உற்சாகம், பரவசத்தின் வெளிப்பாடாக இவ்வாறு நடந்து கொண்டேனே தவிர, இதில் உள்நோக்கம் இல்லை.

என்றாலும் ஹெர்மோசாவிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஒரு கால்பந்து சங்க தலைவராக இருக்கும்போது மிகவும் கவனமுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை புரிந்து கொள்கிறேன். இது எனக்கு ஒரு பாடமாகும்..” என தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை அணியின் 4 வீரர்களுக்கு ஓய்வு

நியூசிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் குசல் மெண்டிஸ், பெத்தும் நிஸ்ஸங்க,கமிந்து மெண்டிஸ்...

நியூஸிலாந்துடனான தொடரையும் இலங்கை கைப்பற்றியது

கண்டி, பல்லேகலையில் மழையினால் தடைப்பட்டு தொடர்ந்து நடைபெற்ற இலங்கைக்கும் நியூஸிலாந்துக்கும் இடையிலான 2ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்...

இலங்கை – நியூசிலாந்து 2வது போட்டி இன்று

சுற்றுலா நியூலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது....