யெமென் வழியாக சவுதி அரேபியாவிற்கு சட்டவிரோதமாக புலம்பெயர்வோர் மீது அந்நாட்டு இராணுவம் வெடிகுண்டு வீசி தாக்கி வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
எத்தியோப்பியா போன்ற ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள், வேலை தேடி சவுதி அரேபியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்து வருவதாக கூறப்படுகிறது.
யெமென் எல்லை அருகே அவர்களை சவுதி அரேபிய இராணுவத்தினர் கண்மூடித்தனமானச் சுட்டு கொல்வதாகவும், கடந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் மட்டும் 430 பேர் இறக்கமின்றி கொல்லப்பட்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க சவுதி அரேபியா மறுத்துவிட்டதாக மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.