பேராயர் ஜெரோம் பெர்னாண்டோ வெளியிட்ட அறிக்கையினால் புத்தர் அவமதிக்கப்பட்டதாக சமூக கருத்து உருவாக்கப்பட்டுள்ளதாக ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
ஜெரெம் பெர்னாண்டோவின் பெற்றோர் அவரைச் சந்தித்து அந்தக் கூற்றுகள் குறித்து விவாதிக்க வந்ததாகவும், தங்கள் மகனின் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் தேரர் மேலும் குறிப்பிடுகிறார்.
இவ்வாறான நட்பு ரீதியான கலந்துரையாடல்கள் மிகவும் முக்கியமானவை எனவும் இன்றைய நாகரீக உலகில் மதத்தின் பெயரால் இரத்தம் சிந்தப்படக் கூடாது எனவும் அவர் வலியுறுத்துகின்றார்.
தவறின் விளைவுகளை தவறிழைத்தவரே அனுபவிக்க நேரிடும் என்றும், தவறை ஏற்றுக்கொண்டால், புத்தரின் வழியைப் பின்பற்றி மன்னிக்கத் தயார் என்றும் சோபித தேரர் தெரிவித்துள்ளார்.