follow the truth

follow the truth

April, 5, 2025
Homeஉள்நாடுமேலும் 20 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் தாயகத்திற்கு

மேலும் 20 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் தாயகத்திற்கு

Published on

தேசிய மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் சீனாவிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட தடுப்பூசிகளே இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளன.

இந்த தடுப்பூசிகளுடன் நாட்டை வந்தடைந்ததன் பின்னர் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட மொத்த சைனோபாம் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 91 இலட்சமாக அதிரிக்கும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன நேற்று தெரிவித்தார்.

இதேவேளை, இன்றைய தினம் நாட்டை வந்தடைந்த 20 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகளில், குருணாகல் மாவட்டத்துக்கு 4 இலட்சம் தடுப்பூசிகளும், காலி மாவட்டத்துக்கு 275,000 தடுப்பூசிகளும், மாத்தறை, பதுளை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு தலா 2 இலட்சம் தடுப்பூசிகளும் வழங்கப்படவுள்ளன.

அவ்வாறே, குறித்த சைனோபாம் தடுப்பூசிகளில் புத்தளம், பொலனறுவை, நுவரெலியா, மொனராகலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களுக்கு தலா ஒரு இலட்சம் தடுப்பூசிகளும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்துக்கு 125, 000 தடுப்பூசிகளும் வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்தார் மோடி

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய பிரதமர் மோடி தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இது குறித்து அவர்...

இந்தியா – இலங்கை 07 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாற்றம்

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பல்வேறு துறைகளில் கைச்சாத்திடப்பட்ட 07 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் பரிமாற்றம் இன்று(05) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்...

எதிர்க்கட்சி தலைவரை சந்தித்த இந்திய பிரதமர் மோடி

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு...